சாதனைக்கு மேல் சாதனை!!! : டி20 போட்டியில் அதிக ஓட்டங்களை விளாசியது இங்கிலாந்து!!!

0
218
England women cricket team T20 record news Tamil

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 250 ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்துள்ளது.

கிரிக்கெட்டை பொருத்தவரையில் தற்போது அடுத்தடுத்து சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றது. முதலில் நியூஸிலாந்து மகளிர் அணி அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 491 ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 481 ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்திருந்தது. தற்போது நேற்றைய தினம் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.

இங்கிலாந்து அணிசார்பில் அதிரடியாக ஆடிய பெயமௌண்ட் 52 பந்துகளில் 116 ஓட்டங்களை விளாசினார். இதில் 18 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்குகின்றன.

இவரை தொடர்ந்து வெயட் 56 ஓட்டங்களையும், பிரண்ட் 42 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்து, இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது மகளிர் டி20 கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணி 216 ஓட்டங்களை பெற்றமையே இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

England women cricket team T20 record news Tamil, England women cricket team T20 record news Tamil, England women cricket team T20 record news Tamil