சங்கக்காரவின் தலைவர் பதவியை வாங்கினார் ரஷல்!!!

0
173
Andre Russell CPL 2018 latest news Tamil

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்காக டளவாஸ் அணியின் தலைவராக மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் என்ரே ரஷல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த ரஷல் கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார்.

இவரது தடைக்காலம் நிறைவுக்குவந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடினார். கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 314 ஓட்டங்களை விளாசியுள்ளதுடன், 13 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்.

இந்நிலையி்ல் தற்போது மீண்டும் ஜமைக்கா அணிக்குள் இணைக்கப்பட்டுள்ள ரஷலுக்கு, அணித்தலைமை பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் குறிப்பிட்ட ரஷல்,

“எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த வருடம் தடை காரணமாக விளையாடவில்லை. இந்த ஆண்டு போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். போட்டியை மாத்திரமின்றி அணித்தலைவராக சிறப்பாக செயற்படவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

ஜமைக்கா டளவாஸ் அணி இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், கடந்த வருடம் எலிமினேட்டர் வரை முன்னேறியிருந்தது. கடந்த வருடம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இந்த அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.

இவ்வருடம் டளவாஸ் அணியில் ரோஸ் டெய்லர், டேவிட் மில்லர், சொயிப் மலிக் மற்றும் சஹிட் அப்ரிடி ஆகியோரும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Andre Russell CPL 2018 latest news Tamil, Andre Russell CPL 2018 latest news Tamil, Andre Russell CPL 2018 latest news Tamil