முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஜனாதிபதியிடம் ஆவணமொன்றை கையளிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. (Planned Sinhala settlements Decision handover document President)
திட்டமிட்ட குடியேற்றத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் பூரணமான ஆதாரங்களுடன் கூடிய ஆவணம் ஒன்றை தயாரித்து 30 ஆம் திகதிக்குள் ஜனாதிபதியை சந்தித்து குறித்த ஆவணத்தை கையளிப்பதற்கு கூட்டமைப்பு உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கூடியிருந்தது.
குறித்த கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் மகாவலி அதிகார சபையின் எல் வலயம், கே வலயம் மற்றும் ஜே வலயத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்தும்,
குறித்த குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஒட்டுமொத்தமாக இவ்வாறான குடியேற்றங்களால் வடமாகாணத்தில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் குறித்தும் தெளிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுவரும் பகுதிகள், அந்த குடியேற்றங்களினால் பறிக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய காணிகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இதர பாதிப்புக்கள் குறித்து பூரணமானதும், ஆதாரங்களுடன் கூடியதுமான அறிக்கை ஒன்றை தயாரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த அறிக்கையை தயாரிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தனிப்பட்ட செயலாளரும், முன்னாள் அரச அதிபருமான சண்முகம் மற்றும் பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற காணி ஆணையாளர்கள், அரச அதிகாரிகள் சிலர் உள்ளடங்கலாக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த குழு வரைபடங்கள், ஆதாரங்களுடன் தெளிவானதும், பூரணமானதுமான ஆவணம் ஒன்றை தயாரிக்கவேண்டும் எனவும் அந்த ஆவணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியிடம் நேரில் கையளித்து விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சி. சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, ஈ. சரவணபவன் தமிழரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எஸ். சிவநேசன், ஆகிய 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாணசபை சார்பில் மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் மற்றும் பேராசிரியர்கள், அரச அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
tags :- Planned Sinhala settlements Decision handover document President
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- விண்வெளிப்படையை அமைக்க உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்! அப்போ ஏலியன்கள் உண்மை தானே?
- பிக் பாஸ் முடிவில் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா..? : 1,140 கோடியாம்..!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!