வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?

0
596
Lyca mobile company accused helping drug users

லைகா மொபைல் தொலைபேசி அட்டைகள் மற்றும் சிம் கார்டுகள் விற்பனை தொடர்பாக பாரிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.Lyca mobile company accused helping drug users

லைகா மொபைல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம்  சிம் கார்டுகளை விற்பனை செய்யும் போது, வாடிக்கையாளர்களின் தகவல்களை சரிவர பதிவதில்லை. இந்த காரணத்தினால் குற்றங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி சுவிஸ் செய்தி நிறுவனம் ஒன்று கருத்து தெரிவிக்கையில், போதைபொருட்களை பாவிப்போரில் அதிகமானோர் லைகா சிம் கார்டுகளையே உபயோகிப்பதாக தெரிவித்தது. மேலும் லைகா மொபைல் சரியான சுய விவரங்களை பரிசீலித்து சிம்களை வழங்காததால், பொலிசார் சோதனை மேற்கொள்ளும் போது அவர்களை சரிவர பின் தொடர்ந்து அடையாளம் கண்டு கொள்ள முடியாது உள்ளதாக தெரிவித்தது.

குறித்த சுவிஸ் ஊடகமானது ஓராண்டு காலத்திற்கும் மேலாக லைகா நிறுவனத்தை கண்காணித்து வந்ததில், திடுக்கிடும் மற்றும் வெளியிட முடியாத பல தகவல்களை திரட்டியுள்ளதாகவும் கூறியது.

பதிவு செய்யாத சிம்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டங்கள் இறுக்கமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் பயனாளர்களுக்கு இனிமேலும் இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கக் கூடாது என இந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்தது.

https://youtu.be/fRaKXBMTkFo

Source: Paran

tags :- Lyca mobile company accused helping drug users

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்