ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது

0
303
Gnanasara Thera treated ordinary prisoner

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (Gnanasara Thera treated ordinary prisoner)

ஏற்கனவே, தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கலகொட அத்தே ஞானசார தேரர் காவி உடையுடன் சிறைத் தண்டனை அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், அவருக்கு கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையே வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே 18 பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் 15 பேர் பௌத்த பிக்குகள் என்றும் ஆறு மாதங்கள் தொடக்கம் 7 ஆண்டுகள் வரை இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அரைக்காற்கட்டையுடன் கூடிய சிறைச்சாலை உடையே அணிந்திருக்கின்றனர். இவர்கள் தவிர, மேலும் 10 பௌத்த பிக்குகள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார் தலா ஒவ்வொருவரும் சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர்.

கொலை, பாலியல் துஷ்பிரயோகம், கொள்ளை, வன்முறை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் இந்து மதகுரு, சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் தண்டனையை அனுபவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

tags :- Gnanasara Thera treated ordinary prisoner

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites