பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் பிணைமுறி மோசடி ஆவணங்கள்

0
122
Fraudulent documents banned Parliament

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் சகலவிதமான ஆவணங்களையும், இணைப்புகளையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவது தொடர்பாக சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கையெடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளரால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். (Fraudulent documents banned Parliament)

நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலுள்ள சீ 350 360 வரையான ஆவணங்களே அனுப்பி வைக்கப்பட்டன. அவை தொடர்பில் ஜுன் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கை சம்பந்தமான கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சீ 1 முதல் 349 வரையான அனைத்து ஆவணங்களையும், இணைப்புகளையும் கூடிய விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறுகோரி ஜுன் மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதி செயலாளரால் ஜூலை மாதம் 18 ஆம் திகதி சட்டபூர்வமான பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் பிணைமுறிமோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகலவிதமான ஆவணங்களையும், இணைப்புகளையும் பாராளுமன்றத்துக்கு வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனவே, அவரின் ஆலோசனை, இணக்கப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதனால் இவ்விவகாரம் தொடர்பான சகலவிதமான ஆவணங்களும் ஜனாதிபதி செயலகத்திடமிருந்து சட்டபூர்வமாக எனது கைகளுக்கு கிடைக்கும்வரை, ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டு, பாராளுமன்றத்துக்கும், நாட்டிற்கும், எம்.பி.க்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை, அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்துமாறு எம்.பி.க்களிடமும், ஊடகங்களிடமும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

tags :- Fraudulent documents banned Parliament

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites