வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே

0
271
fake doctor charged sexual abuse Vavuniya

வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர், ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதியற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. (fake doctor charged sexual abuse Vavuniya)

அத்துடன், குறித்த நபர் வைத்தியசாலைகள் எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் இல்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும் இவரை வைத்தியர் என குறிப்பிட்டு முழு வைத்திய சமூகத்தையும் கொச்சை படுத்துவதாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று முன்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் வைத்தியசாலை பணியாளான பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஒரு வார கால விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, வைத்தியர் வவுனியா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ‘அண்மையில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல, ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை.
இவரை வைத்தியர் என குறிப்பிட்டு முழு வைத்திய சமூகத்தையும் கொச்சை படுத்துவதாக செய்தி அறிக்கை அமைந்துள்ளது.

எனவே இதுதொடர்பான மாற்றத்தினை செய்தி அறிக்கையில் மேற்கொள்ளுமாறு வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- fake doctor charged sexual abuse Vavuniya

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites