தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

0
209
Dalit children attacked notices R Gandhi, india tamil news, india news, india, Dalit children,

{ Dalit children attacked notices R Gandhi }

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளங்களை வெளியிட்டது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததாக, இரு தலித் சிறுவர்கள் நிர்வாணக்கபட்டு தாக்கபட்ட வீடியோ சமூக வலைதளங்ளில் பரவி பெரும் சர்ச்சையானது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அவர்கள் செய்த ஒரே குற்றம், மேல் சாதியை சேர்ந்த ஒருவரின் கிணற்றில் குளித்தது மட்டுமே. பா.ஜ.கா மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் விஷ – அரசியலுக்கு எதிராக நாம் குரலை எழுப்பவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது” என்று கூறி அந்த வீடியோவையும் பகிர்ந்தார்.

இந்நிலையில், சிறுவர்கள் நிர்வாணமாக்கி தாக்கப்படும் வீடியோவை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்ததால், ராகுல் காந்திக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ராகுல் காந்தி 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கபடும் சிறுவர்களின் தகவல்களைப் பகிர்வது குழந்தைகளுக்கான வன்கோடுமை சட்டப்படி குற்றமாகும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் நிருப்பம் “அவருக்குப் பதிலாக இந்தக் குற்றத்தை தடுக்கத் தவறிய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருக்குதான் நோட்டீஸ் அனுப்பபட்டிருக்க வேண்டும்.

மாறாக இதைப் பொது வெளிக்கு தெரியப்படுத்திய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது ஒரு முட்டாள் தனமான செயல்”என்று கூறியுள்ளார்.

Tags: Dalit children attacked notices R Gandhi

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை! (படம் இணைப்பு)

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

*உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

*ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!

*தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :