காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

0
152
Congress leader RahulGandhi discussed political situation tamilNadu

Congress leader RahulGandhi discussed political situation tamilNadu

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, யாருக்கும் ஆட்சேபம் இருந்தால், அதை தெரிவிக்குமாறு, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து, கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டெல்லி சென்ற கமல்ஹாசன், தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் தமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து கமல் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து, இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

Congress leader RahulGandhi discussed political situation tamilNadu

More Tamil News

போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!

கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

​​​15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :

Technotamil.com

Tamilhealth.com

Sothidam.com

Cinemaulagam.com

Ulagam.com

Tamilgossip.com