பிக் பாஸ் முடிவில் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா..? : 1,140 கோடியாம்..!

0
155
BiggBoss Season2 tamil profit details,BiggBoss Season2 tamil profit,BiggBoss Season2 tamil,BiggBoss Season2,BiggBoss

கடந்த வருடம் முதல் முறையாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் ஓவியா ஆர்மி, ஆர்த்தி அலப்பறை, காயத்ரியின் தூய தமிழ், ஜூலியின் சில்லறை வேலைகள், ஆர்வ்வின் காட்டப்படாத முத்த காட்சி எனப் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.BiggBoss Season2 tamil profit details

ஓவியா ஆர்மியின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னதாகவே தமிழில் ”பிக்பாஸ் 2” ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தூங்கிக்கொண்டு இருக்கும் ஓவியா ரசிகர்களை இழுக்க அறிமுக நிகழ்ச்சியில் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள்ள அனுப்பிப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆண்டவர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வரவு செலவுகள் எனப் பேஸ்புக்கில் ஒரு கணக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்தால் நீங்க ஆடிப்போயிருவீங்க.BiggBoss Season2 tamil profit details

* ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.

* நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.

* மற்ற 16 பேருக்கு ₹ 42 கோடி

* 100 நாள் படப்பிடிப்புச் செலவு ₹25 கோடி

* முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி

* மொத்த செலவு ₹110 கோடி

* பிக் பாஸ் நிகழ்ச்சியின் வருவாய் 30 வினாடிக்கான விளம்பரத்திற்கு மட்டும் ₹ 25 லட்சம்

* ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 வினாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி

* 100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி மொத்த லாபம் ₹ 1140 கோடி

100 நாள் இப்படி 100 நாளில் விஜய் டிவியும், என்டமோல் ஷைன் நிறுவனமும் சுமார் 1140 கோடி ரூபாயை லாபமாக மட்டுமே பெறுகிறது. இந்த நிகழ்ச்சியால் ஏற்படும் தாக்கம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தடைப்படாமல் நடத்தத் தூண்டுகிறது. இந்தக் கணக்கீட்டில் 10 முதல் 20 சதவீதம் மாறுபடும். மேலும் இந்தப் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தவை உங்கள் பார்வைக்கு.

நிறையப் பேருக்கு இந்த நிகழ்ச்சியைப் பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல. ஹிந்தியில் பல வருஷமா ஓடிட்டு இருக்கும் நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு.

100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாளில் முடிச்சிடுவாங்க, அதை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவார்கள்.

என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே. ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

நிறையச் சண்டைகள், மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கிக் காதல், கள்ளக்காதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும். மக்கள் அதைக் கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்.

சிலர் தாங்களாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேறுவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள். இளைஞர்களைக் கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள். ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள். எல்லாமே செட்டப்.

மேலும், இறுதியில் அவர்கள் முடிவு செய்த படியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்தச் சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும். இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்த்து வந்த மக்கள், இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள், அடுத்தச் சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள்.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!

Tags :-BiggBoss Season2 tamil profit details

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??