3 வயது சிறுமியை காணவில்லை!

0
43
3 year old school student missed insidee bus

பிரான்ஸில், 3 வயது பாடசாலை சிறுமி ஒருத்தி, நான்கு மணிநேரமாக பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 year old school student missed insidee bus

Ris-Orangis ( Essonne ) நகரில் உள்ள மழலை பள்ளி ஒன்றில் காலை 11.30 மணிக்கு தனது மகளை அழைத்துவர, பாடசாலைக்கு வந்த பெற்றோர் பிள்ளையை காணவில்லை என்றதும் ஆசிரியருடன் விசாரித்தனர். அதற்கு ஆசிரியர் குழந்தை பாடசாலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பாடசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 8 மணிக்கு சிறுமி பாடசாலை பேரூந்தில் தாம் ஏற்றியதாக பெற்றோர் உறுதிப்பட தெரிவித்ததைத் தொடந்து தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. அப்பகுதி நகர முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சில நிமிட தேடுதல் வேட்டைக்குப் பின், பாடசாலையில் பேரூந்துக்குள் இருந்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளாள். பேரூந்தில் இருந்து மாணவர்களை இறக்கும் போது குறித்த சிறுமியை மறந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் குழந்தை மீட்கப்பட்டதை தொடர்ந்து, பாடசாலையின் மீது சில விசாரணைகள் காவல்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**