மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இளம் வீரர்!!!

0
275
Keemo paul play third test vs Sri Lanka 2018 news Tamil

இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மே.தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பவுல் அழைக்கப்பட்டுள்ளார்.

மே.தீவுகளின் துடுப்பாட்ட வீரர் ஷிம்ரன் ஹெட்மையருக்கு பதிலாக, குறித்த 20 வயதான கீமோ பவுல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கீமோ பவுல் நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடும் பட்சத்தில் இவரது அறிமுக போட்டியாக இந்த போட்டி அமையும்.

மே.தீவுகளின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும், ஆரம்ப ஓவர்களில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது.

கீமா ரோச் மற்றும் கேப்ரியல் சிறப்பாக பந்து வீசினாலும், ஆரம்பத்தில் இவர்களது பந்து வீச்சு எடுபடவில்லை. இதனால் ஆரம்ப ஓவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த மே.தீவுகள் எதிர்பார்த்துள்ளது.

இதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கட்டுகளை கைப்பற்ற தவறிய மிகுவல் கம்மின்ஸுக்கு பதிலாக கீமோ பவுல் இணைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீமோ பவுல் 14 முதற்தர போட்டிகளில் விளையாடி 17.35 என்ற சராசரியில் 54 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை ஷிம்ரன் ஹெட்மையர் சுகயீனம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து நடைபெறவுள்ள பங்களாதேஷ் தொடரில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மே.தீவுகள் கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Keemo paul play third test vs Sri Lanka 2018 news Tamil, Keemo paul play third test vs Sri Lanka 2018 news Tamil