இந்திய அணியால் புறக்கணிக்கப்படும் ஜடேஜாவுக்கு புதிய முன்னேற்றம்!!!

0
172
Ravindra Jadeja icc test ranking news Tamil 2018

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரசரிசையில் மீண்டும் முன்னேறியுள்ளார்.

இலங்கை மற்றும் மே.தீவுகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலிருந்த ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜடேஜா, 6 விக்கட்டுகளை வீழ்த்தியதன் ஊடாக தரவரிசையில் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகின்றார்.

இதேவேளை ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஜடேஜா, சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அதேபோன்று இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கட்டுகளை வீழ்த்திய மே.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் முதன்முறையாக 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வாழ்நாளில் 754 என்ற அதிகமான புள்ளிகளை பெற்று 12வது இடத்துக்கு முன்னேறியுள்ள கேப்ரியல் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 121 ஓட்டங்களுக்கு 13 விக்கட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

ravindra jadeja icc test ranking news Tamil 2018, ravindra jadeja icc test ranking news Tamil 2018, ravindra jadeja icc test ranking news Tamil 2018