சென்றாயனை வம்புக்கு இழுத்த மும்தாஜ் : பிக் பாஸ் குடும்பத்தில் ஆரம்பித்த முதல் குழப்பம்..!

0
149
Mumtaz warns Sentrayan BiggBoss Season2,Mumtaz warns Sentrayan BiggBoss,Mumtaz warns Sentrayan,Mumtaz warns,Mumtaz

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ”பிக் பாஸ்” இரண்டாவது சீசனில் முதல் ஆளாக மும்தாஜ் மற்றும் சென்றாயன் ஆகியோர் இடையே ஏற்பட்டிருப்பதாக காண்பித்துள்ளனர்.(Mumtaz warns Sentrayan BiggBoss Season2)

அதாவது, உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கு ”பிக் பாஸ்” இரண்டாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிதே தொடங்கியது. வழக்கமான அறிமுகங்களுடன் போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களுடன் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த சீசன்களில் பல்வேறு டுவிஸ்டுகளையும், சர்ப்ரைஸ்களும் நாட்கள் செல்ல செல்ல அளித்தனர். ஆனால் இந்த சீசனில் முதல் நாளே பிக் பாஸ் முதல் சீசனின் கதாநாயகி ஓவியாவை விருந்தாளியாக களமிறக்கியிருக்கிறார்கள். இது ஓவியா ஆர்மி உள்ளிட்ட அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தாலும், போட்டியாளர்கள் மத்தியில் டரியல் ஆக்கியது.

அவர் விருந்தாளி என்று நமக்கு தெரிந்தாலும், போட்டியாளர்களுக்கு தெரியாதது முதல் நாளில் வைச்சு செம டுவிஸ்ட்.

இந்நிலையில், வழக்கம் போல் அடுத்த நாள் என்ன நடக்கிறது என்பதை காட்டும் விதமாக புரொமோக்கள் திங்கட்கிழமை (நேற்று) ஒளிபரப்பப்பட்டன. இதில், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை பொன்னம்பலம் வாசிக்க, இதர ஹவுஸ்மேட்ஸ் கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி, பெட்ரூம்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தபால் உறையை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அப்போது ஆண், பெண் என அனைவரும் பெட்ரூமுக்குள் சென்று தேடுகின்றனர்.

அச் சமயத்தில் பெண்களின் துணிகளில் கை வைக்கக் கூடாது என்று ஆண்களுக்கு ஸ்டிரிட்டாக மும்தாஜ் கட்டளையிடுகிறார். இதற்கு, அப்படி பார்க்காமல் பின் எப்படி பார்ப்பார்கள் என காட்டமாக கூறி வெளியே நடக்கிறார்.

பின்பு மற்றொரு காட்சியில் கேமராவைப் பார்த்து ஐ ஏம் சாரி என மும்தாஜ் கேட்பது போல் காட்சியும் இடம்பெறுகிறது.

இதனைப்போன்றே மற்றொரு புரொமோவில், டைனிங் டேபிளில் உட்கார்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு காட்சியில் மும்தாஜ் முன்னால் மலை மலை பாடலுக்கு பொன்னம்பலம் டான்ஸ் ஆடி, சென்றாயனிடம் ஸ்டெப் ஓகே வா எனக் கருத்து கேட்பது போல் உள்ளது.

கடந்த சீசனைப் போல் இல்லாமல், முதல் நாளிலிருந்து சண்டை, அதிரடி, வாக்குவாதம் என்று தற்போது ”பிக் பாஸ்” தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் நாள்தோறும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

கவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா..? : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

2.0 படத்தின் டீஸர் ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Mumtaz warns Sentrayan BiggBoss Season2

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 19-06-2018