மொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…

0
225
Man affair Moratuwa news

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக ஏமாற்றி தனது மருமகளின் தாயுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவர் மொறட்டுவ பிரதேசத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது. (Man affair Moratuwa news)

இதனை அறிந்த இவரின் மகனும் , மருமகளும் மற்றும் மகளும், மருமகனும் இவர் மொறட்டுவ பிரதேசத்தில் வசித்து வந்த வீட்டிற்கு சென்று இவரை தாக்கியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இரண்டு பிள்ளைகளின் தகப்பன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு இவர் காணாமல் போயுள்ளதோடு அப்போது அவரின் இரு பிள்ளைகளும் மற்றும் இவரின் முறையான மனைவியும் இது தொடர்பாக மொறட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் இவரின் திருமணமான மகனும் மகளும் பல ஆலயங்களுக்கு சென்று தெய்வங்களிடம் தங்களின் தகப்பனை தேடி தருமாறு பல பூஜைகள் நடத்தியுள்ளனர்.

பின்பு இவர்களின் தகப்பன் பண்டாரகமை பிரதேசத்தில் ஒரு வீட்டில் வசிப்பதாக அறிந்து அவரை தேடி அங்கு சென்ற போது இவர்களை கண்டவுடன் அவர் அங்கிருந்த கட்டில் கீழ் ஒழிந்துள்ளார்.

அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இங்கு தனது மனைவியின் தாயும் இருப்பதை கண்டு தனது தகப்பன் அவருடன் தான் சீவித்துள்ளார் என தெரிந்துக்கொண்டனர்.

தனது மாமியார் பாணந்துறை பிரதேசத்தில் தொழில் புரியும் நிலையத்தில் தங்கி இருந்து தொழில் செய்வதாகவும் கிழமைக்கு ஒருநாள் தவறாமல் இவர்களின் வீட்டுக்கும் சென்றும் வந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரை தாக்கியதாக இவரின் மனைவி, மகன் மகனின் மனைவி மற்றும் மகள், மகளின் கணவன் ஆகியோரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

tags :- Man affair Moratuwa news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites