கோட்டாபய ஒரு சர்வதேச தீவிரவாதி – சம்பிக்கரணவக்க!!

0
651
Champika said no truth waste worn Singapore brought Sri Lanka

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சர்வதேச தீவிரவாதி என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாரிய திட்டங்களுக்கான அமைச்சரான சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்கரணவக்க அடையாளப்படுத்தியுள்ளார். (Gotabaya international terrorist)

கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இவை குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தாமதமின்றி ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் மத்திய வங்கி நிதி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்களை விட, கோட்டாபயவின்அவன்காட் நிறுவனத்திடம் இருந்து கடந்த தேர்தல்களில் பணம் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தெஹிவளை கல்கிஸை மாநகர சபைக்கு உட்பட்ட மக்களுக்கான நடமாடும் மக்கள் சேவை நிகழ்வொன்று மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

ஆவணங்கள் இல்லாத பலருக்கு இதன்போது உரிய ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த தேர்தல் காலங்களில் தங்களிடம் அமைச்சர் சம்பிக்கரணவக்க தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பணம் கோரியதாக அவன்காட் நிறுவன பணிப்பாளர் நிஸ்ஸங்கசேனாதிபதி சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நிகழ்வில் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, முன்னாள்      பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டுக் காட்டினார்.

‘கோட்டாபய ராஜபக்சவும், அவன்காட் நிறுவன பணிப்பாளர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் இன்று எங்கள் மீது சீறிப்பாய்கின்றனர்.அவன்காட் நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தபடியினால் எங்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் எமது நாட்டில் நிலவுகின்ற செல்வந்தவர்களுக்கெதிராக வழக்குகளை நிலுவையில் வைக்கும் கிரமத்தினால் விசாரணை பிற்போடப்பட்டு வருகிறது.

எனினும் என்றாவது ஒருநாள் நீதி நிலைநாட்டப்படும் வரைக்கும் போராடுவோம். ஸ்ரீலங்கா கடற்படைக்கு கிடைக்க வேண்டிய பணத்தை சூறையாடிய அவன்காட் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் பெற்றவர்களது பெயர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அலோசியஸிடம் இருந்து பெற்ற பணத்தை விட இது மிகவும் பயங்கரமானதாகும்” என்றார் அமைச்சர் சம்பிக்க.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கோட்டாபய ராஜபக்ச ஒரு சர்வதேச தீவிரவாதி என்று பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர் சம்பிக்க ரணவக்க….

‘செங்கடலில் அவர் மிதக்கும்ஆயுதக் கப்பலை வைத்திருந்தார். அதேபோல உக்ரைன் அரசின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்த குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டுள்ளார். இது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒரு சர்வதேச பயங்கரவாதி. அரச பணத்தை கொள்ளையிட்டு வாழ்கின்ற அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புபட்டவரா என்பதை ஆராய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.

ஸ்ரீலங்கா கடற்படையினால் நைஜீரிய அரசுக்கு ஆயுதங்கள் வழங்கிய விவகாரத்தில் தலையீடு செய்து அதிலும் நிதியை மோசடி செய்ய முயற்சித்த போதிலும் அதனை தடுத்து நிறுத்தினோம்.

தரங்குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்து பணத்தை சூறையாடிய, அனல் மின்உற்பத்தி நிலையத்தின் ஊடாக பணம் மோசடி செய்த, ஸ்ரீலங்கா கடற்படை, விமானப்படை மிக் விமான மோசடி செய்தவர்களே இன்று வியத்மக என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டு வருகின்றனர்.

எனக்கு வெளிநாடுகளில் 7 பில்லியன் ரூபா இருப்பதாக இந்த மோசடியாளர் கூறுகிறார். மிக் விமான மோசடியில் கிடைத்த பணத்தை வேர்ஜின் தீவுகளில் வைப்பிலிட்டவர்களே இதனை கூறுகிறார்கள். நாங்கள் இந்த நாட்டில் ஒருசதமேனும் மோசடி செய்யவில்லை.

ஸ்ரீலங்கா அரசாங்கம் இலாபம் ஈட்டுவதற்கு உருவாக்கிய ஒரேயொரு நிறுவனத்தை முடிந்தால் காண்பிக்குமாறு ராஜபக்ச குடும்பத்திற்கு நான் பகிரங்க சவாலை விடுக்கின்றேன்” என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோட்டாபய மற்று மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சவால் விடுத்தார்.

tags :- Gotabaya international terrorist

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites