டக்கிளசின் முதலமைச்சர் கனவுக்கு மக்கள் கூறப்போவது என்ன?

0
293
EPDP Douglas Devananda Plans North Provincial Council CM

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தற்போது ஆட்சி செய்துவரும் மாகாண சபை எந்தளவுக்கு சாதித்தது என்பது பெரும் கேள்விக்குரிய ஒன்றே. EPDP Douglas Devananda Plans North Provincial Council CM

“மலர்ந்தது தமிழர் ஆட்சி” என்னும் கோஷத்துடன் தொடங்கிய வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் பெரிதாக சொல்லும் படியான சாதனைகள் எதுவுமின்றி முடிவுறும் நிலையில் உள்ளது.

ஆனால் இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கான போட்டி நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

ஒரு புறம் மாவை சேனாதிராஜா மற்றும் தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முட்டி மோதி கொள்ள மறுபுறத்தில் ஈபிடிபி கட்சியின் பொது செயலாளர் டக்கிளஸ் தேவானந்தா முதலமைச்சர் கனவில் மிதந்து வருகின்றார்.

டக்கிலஸை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் முன்னரை விட அரசியல் வாக்கு பலத்தில் அதீத முன்னேற்றம் உள்ளது. அதன் பிரகாரம் அவருக்கு வந்த முதலமைச்சர் ஆசையில் தப்பில்லை.

ஆனால் யாழ் மாநகர சபையை கையில் வைத்திருந்த காலத்திலேயே ஈபிடிபி கட்சியினர் செய்த நாசகார செயல்கள் பற்றி விசேடமாக நாம் கூற வேண்டிய அவசியமில்லை.

அது மட்டுமன்றி அதிகாரம் அவர்கள் கையில் இல்லாத போதே அவர்கள் மக்களை எந்தளவுக்கு இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள் என்பதை தமிழ் மக்கள் என்றைக்குமே மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தவற விட்ட மக்களின் மனங்களை ஈபிடிபி ஓரளவு கைப்பற்றி கொண்டது என்னும் விடயத்தை அனைத்து தமிழ் தேசிய நலன் சார்ந்த கட்சிகளும் சரியாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த நிலைமை தொடச்சியாக நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை மறந்து டக்கிளஸ் பின்னால் அணிவகுக்கும் நிலை உருவாகலாம்.

எனினும் எமது மக்கள் ஒன்றை மட்டும் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். டக்கிளஸ் என்ன தான் சில அபிவிருத்திகளை செய்து தனது கருப்பு பக்கத்தை வெள்ளையடிக்க முயன்றாலும் அவரின் தமிழ் தேசிய நலனுக்கு அச்சுறுத்தலான விடயங்களை நாம் என்றைக்குமே மறக்கலாகாது.

அதன் படி டக்கிலஸின் முதலமைச்சர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரின் ஆசைப்படி அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைக்க எமது மக்கள் முன்வரவேண்டும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு