நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று குவித்த கொடூரமான பெண் டாக்டர்!

0
163
England Female Doctor Jane Barton Murders 100 Patients

இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார். England Female Doctor Jane Barton Murders 100 Patients

இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நர்சு போட்ட ஊசி மருந்துக்கு பின்னர் மரணம் அடைந்தார்.

முன்னதாக உடல் வலி குறித்து தான் டாக்டரிடம் கூறவில்லை என்றும், ஆனால் உடல் வலி போக்கும் ஊசி மருந்தை செலுத்தியதாகவும் அந்த நோயாளி தனது புகாரில் கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமான வலி போக்கும் மருந்தை டாக்டர் ஜேன் பார்டன் பரிந்துரைத்து இருந்தது தெரிய வந்தது.

நோயாளிகளுக்கு “டயாசி பாம்” என்ற மருந்துக்கு பதிலாக டாக்டர் பார்டன் பரிந்துரையின் பேரில் “டயாமார்பின்” என்ற மருந்தை நர்சுகள் அளவுக்கு அதிகமாக அளித்துள்ளனர். அது வி‌ஷமாக மாறி நோயாளிகளின் உயிரை பறித்துள்ளது.

இந்த மருந்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் சிக்காததால் 1998-ம் ஆண்டு விசாரணையை போலீசார் கை விட்டனர்.

டாக்டராக செயல்பட பார்டனுக்கு தகுதி உள்ளதா? என 2001-ம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொழில் முறையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அதையடுத்து 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.

தற்போதைய விசாரணை குழு டாக்டர் ஜேன் பார்டன் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

tags :- England Female Doctor Jane Barton Murders 100 Patients

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

பதினான்கு வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தனிமையில் செய்த காமுக வேலை!

நிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை! (படங்கள் இணைப்பு)

இரண்டாயிரம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட கோடிஸ்வரருக்கு இறுதியில் நேர்ந்தது இது தான்!

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்