காணாமல் போதல் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் ; அல்ஜசீரா

0
241
Disappearances main reason Gotabhaya Rajapaksa, mahinda Rajapaksa

உலகிலேயே அதிகளவிலானோர் காணாமல் போதல் மற்றும் முடிவுக்கு வராத வழக்குகள் நிறைந்த நாடு இலங்கை என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. (Disappearances main reason Gotabhaya Rajapaksa, mahinda Rajapaksa)

அத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு காணாமல் போதல் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜசீரா வெளியிட்டுள்ள காணொளியியேலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியானது முதல் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் இலங்கை மீது வெளிநாட்டு ஊடகங்கள் போர் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் இந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை லண்டனில் 20 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளர் இசைப் பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் அடங்கிய முழு நீள கொலிவுட் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

லண்டன் ஹரோ சபாரி சினிமாவில் இந்தக் காட்சி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

tags :-Disappearances main reason Gotabhaya Rajapaksa, mahinda Rajapaksa

https://www.youtube.com/watch?v=oXhYqGYOBfg

Video source : K Rang

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites