பயணத்தின் போது பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்!

0
164
child born RER_A service- get 25 years free travel

நேற்று, திங்கட்கிழமை RER A ரயிலில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தைக்கு 25 வயது வரை இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது. child born RER_A service- get 25 years free travel

நேற்று, ஜூன் 18 ஆம் திகதி Auber நிலையத்தில், RER A ரயிலில் எதிர்பாராதவிதமாக பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சாள்-து-கோல் Etoile நிலையத்தில் இருந்து Nation நிலையம் வரை RER A சேவை முழுவதுமாக தடைப்பட்டது.
இந்நிலையில் RATP தனது டுவிட்டர் கணக்கு மூலம், தாயும் சேயும் நலமாக இருப்பதாக அறிவித்தது. அதன் பின்னர், ரயிலில் இருந்து இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அதன் பின்னர், குறித்த குழந்தைக்கு பொருத்தமான ஒரு பெயர் சூட்டும்படி RATP டுவிட்டர் கணக்கில் கேட்கப்பட்டது. பலர் Auber என பெயரிடும்படி பரிந்துரைந்தனர். குறித்த குழந்தைக்கு அவனது 25 வயதுவரை இலவச நவிகோ அட்டை வழங்கப்பட உள்ளதாகவும் RATP அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags:- child born RER_A service- get 25 years free travel

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**