ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!

0
267
President Maithripala Sirisena today visited Kilinochchi

சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். (President Maithripala Sirisena today visited Kilinochchi)

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தேசத்தின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உள, உடல் விருத்திக்கு சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறுவர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கி, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனூடாக துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

tags:- President Maithripala Sirisena today visited Kilinochchi

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites