அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!

0
142
Islamic woman knife attack

பிரான்ஸில், இஸ்லாமிய பெண் ஒருவர் அல்லா ஹூ அக்பர் என கத்திக்கொண்டு கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் இருவர் காயமடைந்துள்ளனர். (Islamic woman knife attack)

நேற்று காலை 10 மணி அளவில் La Seine-sur-Mer ( Var) இல் உள்ள பல்பொருள் அங்காடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு நிறத்தில் முற்றாக உடை அணிந்துகொண்டு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த குறித்த பெண், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரு ஆண்கள் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அங்காடியில் நின்றிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சத்தமிட்டுக்கொண்டு தாக்குதல் நடத்திய அந்த இஸ்லாமிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

காயமடைந்த இரு ஆண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர பல்பொருள் அங்காடி முற்றாக சோதனையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- Islamic woman knife attack

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**