துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்!’ – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

0
193
investigate case Thoothukudi shootings said Court Chief Officer

investigate case Thoothukudi shootings said Court Chief Officer

“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்” எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் முன்னெடுத்த பெரும் போராட்டத்தின் 100-வது நாளன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.

போராட்டத்தின் 100-வது நாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே கைகலப்பு நடந்து கலவரம் வெடித்தது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், `துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பின் கருத்து தெரிவித்த இந்திரா பானர்ஜி, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிப்பதே முறையாக இருக்கும். மனுதாரர் சி.பி.ஐ-யிடம் மனு கொடுக்கலாமே’ என்று குறிப்பிட்டார்.  மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு  ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

investigate case Thoothukudi shootings said Court Chief Officer

More Tamil News

Tamil News Group websites :