இலங்கை – தென்னாபிரிக்கா மோதல்! : அறிவிக்கப்பட்டது ஒருநாள் அணி!!!

0
383
CSA named South Africa ODI squad Sri Lanka 2018

இலங்கை  அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணிக்குழாம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பபட்டுள்ளது.

இலங்கை  அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணிக்குழாம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பபட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் ஜுலை 12ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடருக்கான அணிக்குழாத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜுலை 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடருக்கான அணிக்குழாத்தை தென்னாபிரிக்கா சற்றுமுன் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணிக்குழாத்தில் அறிமுக வீரர்களான ரீஷா ஹென்ரிச் மற்றும் ஜுனியர் டலா ஆகிய வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர். எனினும் தென்னாபிரிக்க அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹீருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணி

1. பெப் டு பிளசிஸ் (தலைவர்)

2. ஹசிம் அம்லா

3. ஜுனியர் டலா

4. குயின்டன் டி கொக்

5. ஜேபி டுமினி

6. ரீஷா ஹென்ரிச்

7. ஹென்ரிச் கிளாசன்

8. கேஷவ் மஹாராஜ்

9. எய்டன் மர்க்ரம்

10. டேவிட் மில்லர்

11. வியான் முல்டர்

12. லுங்கி என்கிடி

13. எண்டில் பெஹலுக்வாயா

14. கார்கிஸோ ரபாடா

15. டெப்ரிஷ் ஷெம்சி

<<Tamil News Group websites>>

CSA named South Africa ODI squad Sri Lanka 2018, CSA named South Africa ODI squad Sri Lanka 2018