பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்

0
790
tamilnews short dress school staff principles request

(tamilnews short dress school staff principles request)

இலங்கையில் சில பாடசாலைகளில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் பெண் ஊழியர்களை சாரிக்கு பதிலாக குட்டை பாவாடை அணிந்து வருமாறு அதிபர்கள் வலியுறுத்துவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இந்தநிலைமையில், பாடசாலை அலுவலக உதவியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஜித் கே.திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்களின் இந்த வலியுறுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஹேவகேவிடம் எமது செய்தி சேவை வினவிய போது,

குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களுகான ஆடையை தயார் செய்யுமாறு கல்வி அமைச்சின் தர உள்ளீட்டு பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews short dress school staff principles request)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites