கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்

0
1162
tamilnews kerawalapitiya power station china project case

(tamilnews kerawalapitiya bio power station china handover)

விரைவில் இலங்கை முகம்கொடுக்கவுள்ள சக்திவலு நெருக்கடிக்கு ஒரு தீர்வாக கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் நிர்மானிக்கப்படவுள்ளது.

நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை குறைந்த செலவில் ஈடுசெய்வதாக கூறியிருந்த உள்நாட்டு நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த யோசனை அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் நட்டம் 50 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையின் மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமும் சீனாவிடம் கையளிக்கப்படும் நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

2016 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படவிருந்த குறித்த மின்னுற்பத்தி நிலையம் மின்சக்தி வலுத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட அதனை தடுத்ததன் காரணமாக இரண்டு வருடங்கள் தாமதமடைந்ததமை சுட்டிக்காட்டத்தக்கது.

அண்மைக் காலங்களில் இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குறித்த மின்னுட்பத்தி நிலைய நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தம் தொழினுட்ப மற்றும் நிதி ரீதியான கணிப்பீடுகளின் பின்னர் உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews kerawalapitiya bio power station china handover)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites