நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது

0
609
Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens

(Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens)

இலங்கை பிரஜைகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் நல்லாட்சி என்ற போர்கையில் இந்த அரசாங்கம் மழுங்கடித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

விகாரைகளையும், பள்ளிவாசல்களையும் அமைக்க மக்களுக்கு இருந்த உரிமையை பறிக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், ஹொரொவப்பதான, முக்கரவெவ ஜூம்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (17) விஜயம் செய்திருந்தார்.

அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி நாட்டில் சகல மதத்தவர்களின் வழிபாட்டு தளங்களையும் அமைக்கும் உரிமையை அரசு தன் கையில் எடுத்துள்ளது.

இதன் மூலம் என்ன பின்விளைவுகள் ஏற்படப் போகின்றன.

இலங்கை மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள்.

அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் தமக்கு ஏற்றாற் போல மதத்தலங்களை அமைத்துக் கொண்டு வழிபாடுகளை நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

(Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites