தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்

0
804
lawyer Maithri Gunaratna Tamil speaker speak fluent

(one lawyer Maithri Gunaratna Tamil speaker speak fluent)

தமிழை மிக சரளமாக பேச கூடிய, தமிழ் மக்களுடன் தமிழிலேயே உரையாட கூடிய தென்னிலங்கையை சேர்ந்த ஒரேயொரு தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண மாத்திரமே ஆவார்,

இவரால் மாத்திரமே தமிழ் மக்களின் உணர்வுகளை உள்ளபடி உண்மையாக புரிந்து தமிழர்களுக்கான தீர்வை பெற்று தர முடியும் என்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவரும், அருணோதய மக்கள் முன்னணியின் செயலாளருமான டாக்டர் கே.ஆர்.ஹிர்சாந் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி அதன் அரசியல் நடவடிக்கைகள், மனித நேய வேலை திட்டங்கள் ஆகியவற்றை யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஸ்தரித்து உள்ளது.

இந்தநிலையில் கட்சியின் தலைவர் மைத்திரி குணரட்ண தலைமையிலான உயர்மட்ட குழு மாவட்டத்துக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளது.

சமய தலைவர்கள், சமுதாய செயற்பாட்டாளர்கள், சமய பெரியார்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை இக்குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசியிருந்தனர்.

மைத்திரி குணரட்ணவை சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தி உரையாற்றிய போதே டாக்டர் ஹிர்சாந் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழை கொன்று பேசுகின்றார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழில் பேச தெரியாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வணக்கம் என்று கூட தமிழில் பேசவே மாட்டார்.

ஆனால் தமிழை மிக சரளமாக பேசி, தமிழ் மக்களுடன் தமிழிலேயே உரையாட கூடிய ஒரேயொரு தென்னிலங்கை தலைவராக சட்டத்தரணி மைத்திரி குணரட்ண மாத்திரமே இருக்கின்றார்.

எனவே, இவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்ளபடி உண்மையாக புரிந்து தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தர முடியும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலம் ஆகின்றது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளும் சரி , அடிப்படை பிரச்சினைகளும் சரி முடிவுக்கு வருவதாக இல்லை.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதாக இல்லை. அதே போல தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதாக தெரியவில்லை.

இரு தரப்பினர்களுமே தீர்க்க கூடிய இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்க வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.

ஆனால் உண்மையில் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க வெறும் 06 மாத காலம் போதுமானது.

நல்லாட்சி அரசாங்கத்தை தமிழ் மக்களே கொண்டு வந்தார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவி காலத்தின் பெரும்பகுதி முடிவுக்கு வந்து விட்ட தருணத்திலும் கூட தமிழ் மக்களுக்கு எந்த நல்ல விடயமும் இவ்வாட்சியில் இடம்பெறவில்லை.

யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

அவர்கள் உயிருடன் உள்ளனரா? இறந்து விட்டனரா? தடுத்து வைக்கப்பட்டு உள்ளனரா? என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்பு சான்றிதழும், நஷ்ட ஈடும் வழங்கி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

சர்வதேச போர் குற்ற விசாரணை தேவையா? இல்லையா? என்பதற்கு அப்பால் அதன் பெயரில் அரசாங்கம், தமிழ் அரசியல்வாதிகள் ஆகியோரால் மாத்திரம் அன்றி ஐக்கிய நாடுகள் சபையாலும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதுதான் ஐ. நா. மனித பேரவை கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடந்தேறுகின்றது.

அரசாங்கத்துக்கு கால அவகாசம் நீடித்து கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது.

பொது மக்களின் காணிகள் விடுவித்து கொடுக்கப்படுகின்ற போதிலும் அக்காணிகளை பல வருட காலங்களாக பிடித்து வைத்திருந்ததற்கு வாடகையோ, நஷ்ட ஈடோ அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக இல்லை.

அதை செய்வதை விடுத்து காணிகளை மீள கையளிப்பதை அரசாங்கம் பெருவிழாவாக கொண்டாடுவது சுத்த அபத்தம் ஆகும்.

பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி வட மாகாணத்துக்கு உரியதாக இன்று உள்ளது.

இது பிரதமர் பதவிக்கு இணையானது ஆகும். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்தால் எதையும் தமிழ் மக்களுக்கு பெற்று கொடுக்க முடியும்.

சம்பந்தன் ஐயா கேட்டால் எதையும் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளார்.

அதேபோல வட மாகாண முதலமைச்சர் ஓய்வு நிலை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் எத்தனையோ விடயங்களை முதலமைச்சர் பதவி ஊடாக தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்க முடியும்.

இங்கு உள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதை யதார்த்தத்தில் உணர்ந்து கொண்டுதான் நாம் வெளியில் இருந்து வந்து உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

(one lawyer Maithri Gunaratna Tamil speaker speak fluent)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites