யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)

0
1295
tamilnews anuradapura vanniyakulam sujeewa attacked gang

(jaffna mallagam elzalai sward attack police gun shoot)

யாழ்ப்பாண மல்லாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (17) மாலை ஏழாலை குளமன்காடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர் குழுக்கள் வாள்களுடன் மோதியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோதலை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

எனினும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இயலாத நிலையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் 33 வயதான பாக்கியராஜா சுதர்ஷன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருடைய சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வீதிகளை மறித்து போராட்டம் மேற்கொள்வதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மல்லாகம் சஹாயா மாதா தேவாலயத்தின் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களும்  கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சகாய மாதா ஆலயத்தின் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலயத்தின் முன்பாக இன்று (17) மாலை சுமார் 6.30 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதுள்ளது.

அந்த சம்பவத்தினைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டமைக்கான அடையாளமாக இரத்தக்கறைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அங்கு வந்த உயிரிழந்தவரின் உறவினர்கள், குறித்த நபர் எவ்வித குற்றச் செயலோடும் தொடர்பற்றவர் என்று கூறுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கிச் சூடு நடத்திய சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், இறந்தவரின் மரண விசாரணைகளை நேரில் சென்று மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

(jaffna mallagam elzalai sward attack police gun shoot)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites