சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்

0
616
anantha sangari criticize sampanthan campfire vijayakala maheshwaran

இலங்கை தமிழரசு கட்சியினை சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். (ilankai tamil arasu katchi rehabilitation current political situation)

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அதில் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலை ஆரம்பமான இந்த கூட்டம் மாலை வரை இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

அண்மையில் நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது எனவும், அதனை மறுசீரமைக்கு உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் இரா சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

tags :- ilankai tamil arasu katchi rehabilitation current political situation

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites