க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!

0
654
Education Minister's happy news GCE ordinary students

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6 பாடங்களாக ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. (Education Minister’s happy news GCE ordinary students)

மேலும், இதற்கான நடவடிக்கைகள், தேசிய கல்வி நிறுவனத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும், இதேவேளை,சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடையாவிட்டாலும், குறித்த தொழிற்சார் கல்வி பாடங்கள் மூலம் மாணவர்கள் உயர் தரத்திற்கு செல்ல முடியும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Education Minister’s happy news GCE ordinary students

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites