டொவோன் ஸ்மித்தின் அரைச்சதத்துடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மே.தீீவுகள்!!!

0
263
West Indies vs Sri Lanka 2nd Test Day 2 results

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மே.தீவுகள் அணி மெதுவான ஆனால் நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

நேற்றைய தினம் மழைக்காரணமாக போட்டி அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வந்த நிலையில், ஆட்டநேர முடிவில் மே.தீவுகள் அணி 118 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் தினேஸ் சந்திமாலின் 119 ஓட்டங்களுடன் இலங்கை அணி 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தற்போது பதிலளித்து ஆடி வரும் மே.தீவுகள் அணி தங்களது இலக்கை அடைவதற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிராத்தைவட் 22 ஓட்டங்களுடனும், பவெல் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

களத்தில் தற்போது டெவோன் ஸ்மித் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்து 53 ஓட்டங்களுடனும், சாய் ஹோப் 2 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சு முதல் போட்டியை போன்றே மந்தமாக இருந்தாலும், அறிமுக வீரர் கசுன் ராஜித ஒரு விக்கட்டையும், லஹிரு குமார ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka 2nd Test Day 2 results news Tamil