நேற்றைய போட்டியில் பாராட்டப்படும் அஜின்கே ரஹானேவின் செயல்!!!

0
190
India vs Afghanistan Maiden Trophy news Tamil

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது.

தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் முழு ஏமாற்றமடைந்தது எனதான் கூறவேண்டும். ஒரே நாளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சகல விக்கட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் பின்னர் நடைபெற்ற கிண்ணம் வழங்கிவைப்பு நிகழ்வின் போது, இந்திய அணியின் தலைவர் ரஹானே மற்றும் இந்திய அணி வீரர்களின் செயல் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

அணிகள் தொடரொன்றில் வெற்றிபெற்றால் கிண்ணத்துடன், புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அதுபோன்று நேற்றைய தினம் இந்திய அணி வீரர்களும் எடுத்துக்கொண்டனர்.

இதில் என்ன அப்படி மாற்றங்கள் இருக்கிறது என கேள்விகள் எழும்பலாம். ஆனால் இந்திய அணி வீரர்கள் மாத்திரம் நேற்று கிண்ணத்துடன் புகைப்படங்கள் எடுக்கவில்லை.

இந்திய அணியின் தலைவர் அஜின்கே ரஹானே, தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்களை அழைத்து, அவர்களை முன்வரிசையில் இருத்தி, கிண்ணத்தையும் அவர்களுக்கு முன் வைத்தார். இதனை ரசித்த இந்திய வீரர்களும் பின்வரிசையில் இருந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டனர்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

<<Tamil News Group websites>>

India vs Afghanistan Maiden Trophy news Tamil, India vs Afghanistan Maiden Trophy news Tamil