நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்

0
611
expert group notice submit soon new constitute tamil news

புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார். (expert group notice submit soon new constitute tamil news)

இதற்கமைய குறித்த அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க எதிர்பாரத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஆவணமொன்றாக தயாரிக்கும் பொறுப்பை கடந்த மாதம் இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை இம்மாத இறுதிக்குள் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல சூரியனின் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.

குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு மீண்டும் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

tags :- expert group notice submit soon new constitute tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites