வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை

0
2201
child suffered doctor's humanitarian action

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கிடாப்பிடித்த குளம் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் வலிப்பினால் உடல் விறைத்த நிலையில் தனது இரண்டரை வயது குழந்தையை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த தமிழ் வைத்தியர் ஒருவர் வரிசையில் நின்று வருமாறு மனிதாபிமானம் அற்ற முறையில் செயற்பட்டுள்ளார். (child suffered doctor’s humanitarian action)

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வறுமை கோட்டின் கீழ் வாழும் தந்தை ஒருவர் வலிப்பினால் மயக்கமுற்ற நிலையில் தனது இரண்டரை வயது குழந்தையை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த தாதி உட்பட வைத்தியரும் மற்றவர்களை போல் நீங்களும் வரிசையில் நின்று வாருங்கள் என திட்டி துரத்தியதுடன் ”இல்லாவிடில் நீங்கள் எங்காவது போய் முறையிடலாம்” எனவும் கூறியுள்ளனர்.

தந்தை உடனடியாக மிக நீண்ட தூரம் இருக்கும் தனியார் வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

தனது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளார் என குறிப்பிட்டும் இவ்வாறு ஒரு தமிழ் வைத்தியரே செயற்ப்பட்டது வன்மையாக கண்டிக்கபட வேண்டிய ஒரு விடயம் என வைத்தியசாலையில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

tags :- child suffered doctor’s humanitarian action

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites