கத்துக்குட்டி அணியுடன் இன்று மோதும் ஆர்ஜன்டீனா!!!

0
362
Argentina vs Iceland world cup 2018 news Tamil

பிபா உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் குழு டி யிற்கான போட்டியில் அனுபவம் மிக்க ஆர்ஜன்டீன அணி புது வரவு அணியான ஐஸ்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு முறை உலகக்கிண்ணத்தை கைப்பபற்றியுள்ள ஆர்ஜன்டீன அணி, 2014ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இத்தனை பலம் மிக்க அணியுடன் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட நாடான ஐஸ்லாந்து மோதவுள்ளது. ஐஸ்லாந்தின் மொத்த சனத்தொகை 3 இலட்சத்து 35 ஆயிரம் மாத்திரம்தான்.

உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் 32 அணிகளின் மிக சிறிய நாடாக இருக்கும் ஐஸ்லாந்து அணி , மிக பிரசித்தி பெற்ற அணியான ஆர்ஜன்டீனாவுடன் தங்களது உலககக்கிண்ண அறிமுகத்தை இன்று பெறுகின்றது.

ஆர்ஜன்டீன அணியில் லைனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, சேர்ஜியா ஆகுவாரோ போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் விளையாடுகின்றனர். இம்முறை உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் அணியாகவும் ஆர்ஜன்டீனா இம்முறை வலம் வருகின்றது.

2016ம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த ஐஸ்லாந்து அணி, உலகக்கிண்ணத்துக்கும் தகுதிபெற்றுள்ளமை அவர்களது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

ஐஸ்லாந்து அணி, குரோட்டியா, உக்ரைன் மற்றும் துருக்கி ஆகிய அணிகளை வீழ்த்தி, உலகக்கிண்ணத்துக்கு முன்னேறியுள்ளது.

புதிதாக உலகக்கிண்ணத்துக்குள் நுழைந்த ஐஸ்லாந்து அணி, உலகின் மிகப்பெரிய உதைப்பதாட்ட தொடரையும், இரண்டு முறை சம்பியனையும் எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பதே அனைவரதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஆர்ஜன்டீனா – ஐஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு நடைபெறவுள்ளது. இதில் பிரான்ஸ் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.30 இற்கும், பெரு – டென்மார்க் அணிகள் மோதும் போட்டி இரவு 9.30க்கும் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>

Argentina vs Iceland world cup 2018 news Tamil, Argentina vs Iceland world cup 2018 news Tamil