இன்றைய ராசி பலன் 16-06-2018

0
578
Today Horoscope 16-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 1ம் தேதி,
16.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:00 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம் மதியம் 12:41 மணி வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த யோகம்(Today Horoscope 16-06-2018 )

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்:

தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். பிள்ளைகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்:

பேசுவதில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் திட்டமிட்ட இலக்கை எட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உறவினருக்கு தேவையான உதவியை செய்வீர்கள். குடும்ப சுற்றுலா செல்லும் எண்ணம் மேலிடும்.

கன்னி:

பேச்சில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். உறவினர் வகையில் செலவு அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

திட்டமிட்ட பணியில் தாமதம் ஏற்படலாம். சக தொழில், வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. நிலுவைப் பணம் வசூலிப்பதில் நிதானம் பின்பற்றவும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

துலாம்:

சமூகத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்:

பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சியால் தேவை. லாபம் சீராக இருக்கும். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு:

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மகரம்:

மற்றவர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் சீர்பெற நவீன மாற்றங்களில் ஈடுபடுவீர்கள். லாபம் சீராகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம்.

கும்பம்:

இனிய நிகழ்வால் உற்சாகம் பெறுவீர்கள். நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். லாபம் திருப்திகரமாக அமையும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

மீனம்:

சமூக பணியில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today Horoscope 16-06-2018