சுவையான நாட்டுக்கோழி மிளகு கூட்டு

0
569
Tasty naatu chicken curry

(Tasty naatu chicken curry )

கோழிக்கறியில்,  நாட்டுக்கோழிக்கறி  தான் நல்லது என்று சொல்வார்கள்.  அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும்.

கோழிக்கறியை விதவிதமாக ரெசிபி செய்து சாப்பிட விரும்புகிறவருவர்களுக்கு இந்த நாட்டு கோழி மிளகு கூட்டு கண்டிப்பாகப் பிடிக்கும். சரி, நாட்டு கோழி மிளகு கூட்டு ரெசிபியை எப்படி தயார் செய்வது என்பதை இப்போதுப் பார்க்கலாம்.!

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – கால் கிலோ

எண்ணெய் – ஒரு குழிகரண்டி

சீரகம் – அரை டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – பதினைந்து

தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

துவரம் பருப்பு – கால் கப் (வேகவைத்தது)

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய் விழுது – நான்கு டீஸ்பூன்

செய்முறை:
முதலில் , கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு,  சின்ன  வெங்காயம்,  தக்காளி  சேர்த்து  பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து, கோழிக்கறி, சீரக தூள் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின், வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து மிளகு தூள், கொத்தமல்லி தூவி கிளறி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான நாட்டு கோழி மிளகு கூட்டு  தயார்.
tags;-Tasty naatu chicken curry