காலியில் அமைக்கப்பட்ட பெருந்தோட்ட தனிவீடுகள் மக்களின் கையளிப்பு

0
152
tamilnews upcountry new village minister galle individual homes

(tamilnews upcountry new village minister galle individual homes)

காலி மாவட்டத்தில் ஹோமதொள தோட்டத்தில் அமைக்கப்பட்ட 25 தனி வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான காணி உரித்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக கலந்து கொண்டார்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான எம்.திலகராஜ், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்து லால் பண்டாரிகொட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.

(tamilnews upcountry new village minister galle individual homes)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites