மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்!

0
314
Signs Breast Cancer Doctors, tamillhealth news, tamilnews, tamilhealth tips in tamil, cancer,
Woman with a pink breast cancer awareness ribbon

{ Signs Breast Cancer Doctors }

தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.

தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகின்றது.

கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.

* முளைகளில் மாற்றம் – முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.

* நரம்புகள் வளர்தல் – பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.

* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் – பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.

* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் – மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* முளைகள் உள்ளே குழிதல் – முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.

* வெளிப்பகுதியில் கட்டி – மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.

* பெரிய கட்டி – மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.

* மார்பகத்தோல் தடிமனாதல் – பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் – நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.

Related image

Tags: Signs Breast Cancer Doctors

<<MORE HEALTH NEWS >>

*தாய்மைக்கு குறுக்கிடும் கருப்பை அகப்படலம் நோய்!

*தொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…!

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்

*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது? முன்கூட்டியே எப்படி வரவழைப்பது?

*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா?

<<VISIT OUR OTHER SITES>>

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/