கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!

0
38
Shakila movie censor board banned fans shocked,Shakila movie censor board banned fans,Shakila movie censor board banned,Shakila movie censor board,Shakila movie censor
Photo Credit : Google Image

கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படம் வெளியாக இருக்கும் நிலையில், தணிக்கை குழு அப்படத்திற்கு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.(Shakila movie censor board banned fans shocked)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அவர்கள் படங்களை விட வசூலில் ஷகிலாவின் படங்கள் பின்னுக்கு தள்ளின.

அதுமட்டுமல்லாமல், ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் திகதியை தள்ளிவைத்த சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன.

அதன் பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள ”சீலாவதி” என்ற திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப் படத்தை ஸ்ரீராம் தாசரி டைரக்டு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இந் நிலையில், ”சீலாவதி” படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது. படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தணிக்கை குழுவை ஷகிலா கண்டித்துள்ளார்.

அத்துடன், “படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு தடை விதித்து இருக்கிறது. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Shakila movie censor board banned fans shocked

Our Other Sites News :-

சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!
தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டதே : புலம்பித் தள்ளும் ரசிகர்கள்..!
இன்றைய ராசி பலன் 15-06-2018