காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை!

0
492
report human rights violations Kashmir international investigation

report human rights violations Kashmir international investigation

காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளின் மனித உரிமை நிலவரம் குறித்த 49 பக்க அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் நேற்று வெளியிட்டது. காஷ்மீரில் மனித உரிமை நிலை என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கை 2016 ஜூன் முதல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதைப்போல பாகிஸ்தானின் நிர்வாகத்தில் இருக்கும் (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பகுதியில் சர்வதேச மனித உரிமை சட்டங்களை முழுவதுமாக கடைப்பிடிக்குமாறு அந்த நாட்டை அறிவுறுத்தியுள்ள ஐ.நா. கவுன்சில், அங்கு அமைதிப்பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் பொது ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளது.

ஆனால், ஐ.நா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் மீதான அறிக்கை வெளிப்படையான பாரபட்சம் மற்றும் தவறான கதையை உருவாக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளது.

report human rights violations Kashmir international investigation

More Tamil News

Tamil News Group websites :