முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது ஆப்கானிஸ்தான்!!!

0
162
India beat Afghanistan maiden Test 2018 news Tamil

முதல் டெஸ்டில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் தாக்குப்பிடித்து ஆப்கானிஸ்தான் படுதோல்வி

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஏமாற்றத்துடன் படுதோல்வியடைந்துள்ளது.

365 ஓட்டங்களை நோக்கி போலா ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 474 ஓட்டங்களை குவிக்க, ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 109 ஓட்டங்களுக்குள சுருண்டது.

குறைந்த ஓட்டங்களுடன் ஆப்கானிஸ்தான் அணி சுருண்ட நிலையில், அந்த அணியை போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணி பணித்தது.

இதன்படி 365 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி போலோ ஒன் முறையி்ல் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்ஸ் போலவே துடுப்பாட்டத்தில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக விக்கட்டுகளை பறிகொடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஹஸ்மத்துல்லா சஹிடி மாத்திரம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதில் மொஹமட் சேஷாட் 13 ஓட்டங்கள், அணித்தலைவர் அஸ்ஹர் ஸ்டெனிஷ்காய் 25 ஓட்டங்கள் மற்றும் ரஷீட் கான் 12 ஓட்டங்கள் என இவர்கள் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணிசார்பில் ஜடேஜா 4 விக்கட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

<<Tamil News Group websites>>

India beat Afghanistan maiden Test 2018 news Tamil, India beat Afghanistan maiden Test 2018 news Tamil