கோலி சோடா 2 : திரை விமர்சனம்..!

0
46
Goli Soda 2 Movie Review Tamil Cinema,Goli Soda 2 Movie Review Tamil,Goli Soda 2 Movie Review,Goli Soda 2 Movie,Goli Soda 2
Photo Credit : Google Image

முன்னாள் போலீஸான சமுத்திரகனி வடசென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று இளைஞர்கள் பழக்கம். இதில் ஒருவர் ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனி, அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலித்து வருகிறார்.(Goli Soda 2 Movie Review Tamil Cinema)

இவர்களின் காதல் விஷயம் சுபிக்‌ஷாவின் அம்மா ரோகினிக்கு தெரிய வர, ரவுடி தொழிலை விட்டு நல்ல வேலைக்கு போக சொல்லி வலியுறுத்துகிறார். பரத் சீனியும் ரவுடியிடம் இருந்து பிரிந்து நல்ல வேலை செல்ல முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ரவுடியுடன் சேரும் நிலை ஏற்படுகிறது.

மற்றொரு இளைஞர் இசக்கி பரத், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு, கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருந்து வருகிறார். ஒரு கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும் என்பதால் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவர் கிரிஷா குரூப்பை காதலித்து வருகிறார்.

இவர்களின் காதல் விஷயம் தெரிந்த ஜாதி தலைவரும் பக்கத்து வீட்டுக்காரருமானவர் கிரிஷா குரூப்பை அடித்து விடுகிறார். இவர் மீது புகார் கொடுக்க சென்ற கிரிஷா குரூப்பை இசக்கி பரத்தையும் போலீஸ் திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்னர், இசக்கி பரத்தை அடித்துவிட்டு, கிரிஷா குரூப்பை ஜாதி தலைவர் அழைத்து சென்று விடுகிறார்.(Goli Soda 2 Movie Review Tamil Cinema)

மற்றொரு இளைஞர் வினோத், ஆட்டோ ஓட்டி வரும் இவர் கார் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள். இவர் கவுன்சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.

இந்த மூன்று இளைஞர்களும் ஒவ்வொரு பிரச்சனையில் மாட்டுகிறார்கள். இவர்கள் வாழ்க்கை இதன்பிறகு எப்படி சென்றது. சமுத்திரகனி எப்படி உதவி செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் பரத் சீனி ரவுடியுடன் வலம் வருகிறார். காதலியை கரம் பிடிப்பதற்காக ரவுடியை விட்டு விலக முடியாமல், காதலியையுடனும் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. முந்தைய படத்தை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் சுபிக்‌ஷா துறுதுறு பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார்.

இசக்கி பரத் சுறுசுறுப்பான இளைஞராக மனதில் பதிகிறார். இவருக்கு ஜோடியாக வரும் கிரிஷா குரூப்பும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல், வினோத் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சமுத்திகனியின் நடிப்பு பெரிய பலம். இந்த மூன்று இளைஞர்களுக்கும் ஆலோசனை வழங்குவது, எப்படி பிரச்சனைகளை கையாள்வது என்று சொல்லும் போது நமக்கே அதை ஏற்றுக் கொள்ள தோன்றுகிறது.(Goli Soda 2 Movie Review Tamil Cinema)

கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கும் மூன்று இளைஞர்களை இந்த சமூகம் அவர்களை வளர விடாமல் பிரச்சனைகளை கொடுக்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

படம் ஆரம்பத்தில் மெதுவாக செல்கிறது. ஏற்கனவே பார்த்த காட்சிகள் என பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது. ஆனால், பிற்பாதியில் படம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம் என்றே சொல்லலாம்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அச்சு ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் ”கோலி சோடா 2” கேஸ் குறைவுதான்..!

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

கவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Goli Soda 2 Movie Review Tamil Cinema

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 15-06-2018