ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி மேன்முறையீடு!!

0
149
Gnanasara Thero lawyers file appeal

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, அவருடைய சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவை, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.(Gnanasara Thero lawyers file appeal)

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில், கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

அவர் தற்போது சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதனை அப்பகுயில் அமைந்துள்ள மேல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

tags :- Gnanasara Thero lawyers file appeal
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites