ஞானசார தேரருக்கு வெள்ளை உடை : சட்டம் அனைவருக்கும் சமம்

0
1334
gnanasara thero jail dress

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கான சட்ட விதிமுறைகளே, கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.(gnanasara thero jail dress)

சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை சிறைவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையையே அவருக்கும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்க முடியும் என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபை வரவேற்பு
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியிதுவென சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் ஓமர் வரைச் தெரிவித்துள்ளார்.

நீதிகோருபவர்களை மிரட்டி மௌமாக்க நினைப்பவர்களிற்கு தெளிவான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார ரை விடுதலை செய்யாவிட்டால் மொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்குவோம்; : சிஹல ராவய எச்சரிக்கை

ஞானசார தேரரின் தண்டனை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கண்டுகொள்ள வில்லையென்றால், ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக சிஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மகால் கந்த சுதந்த தேரர் ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.

ஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது எனவும் தேரர் மேலும் கூறினார்.

tags :- gnanasara thero jail dress
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites