குற்றவாளி கூண்டில் ஞானசார செய்த செயல் : கோபமடைந்த நீதிபதி

0
934
gnanasara thero court dock

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சிறையிலடைக்க ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து, குற்றவாளிக் கூண்டில் இருந்த ஞானசார தேரர், நீதவானை நோக்கி விரலை நீட்டி ‘நான் செய்த குற்றம் என்ன?” என ஆத்திரம் கலந்த தொனியில் கேள்வியெழுப்பினார். (gnanasara thero court dock)

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் ஞானசார தேரர் தனது இடது கையை உயர்த்தி மன்றுக்கு கருத்து கூற வேண்டும் எனக் கோரினார்.

எனினும் தண்டனை அறிவிப்பு அனைத்தும் நிறைவு பெற்றதால் நீதிமன்றம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்நிலையில் சற்று கடும் தொனியில் நீதிமன்றை விளிக்க ஞானசார தேரர் முற்பட்ட போது, மன்றில் இருந்த அரச சிரேஷ்ட சட்டவாதி ஜனக பண்டார, ‘காபு எக மதித?” என கேட்டார்.
அதாவது தற்போது அனுபவிப்பவை போதாதா. மேலும் தண்டனை வேண்டுமா என தேரரிடம் கேட்டார்.

எனினும் ஞானசார தேரர் அவை எதனையும் கணக்கில் கொள்ளாது நீதிவான் உதேஷ் ரணதுங்கவை நோக்கி விரல் நீட்டி அச்சுறுத்தும் தொனியில்,

‘இந்த நாட்டில் நீதிமன்றம் மட்டும் தானா இருக்க வேண்டும். நான் இந் நாட்டுக்கு செய்த குற்றம் என்ன? என தொடர்ச்சியாக கருத்து கூறினார்.

இதன்போது நீதிவான் உதேஷ் ரணதுங்க, ‘உமக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேன்முறையீடு செய்ய உமக்கு உரிமை உள்ளது. அவற்றை மேன்முறையீட்டில் கூறிக்கொள்ளலாம். வீணாக இங்கு பிரச்சினை ஏற்படுத்தி வழக்குகளுக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள்” என எச்சரிக்கவே திறந்த மன்றில் இருந்த மாகல் கத்தே சுதத்த தேரர் உள்ளிட்ட தேரரை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்தனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர்,

நாம் இந்த நாட்டுக்காக செய்யும் பணிக்கு எமக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உயர்ந்த சம்பள கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையும், ஏச்சும், இகழ்ச்சியும், இவ்வாறு சிறை வாழ்க்கையும் தான் கிடைக்கின்றது. இவை எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

tags :- gnanasara thero court dock
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites