பெண்ணொருவருக்காக மோதிக்கொண்ட ஏழு இளைஞர்கள்; கம்பளையில் சம்பவம்

0
561
Gampola area School Three Students clash

கம்பளை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்விகற்கும் மூன்று மாணவர்கள், மாணவி ஒருவர் மேல் வைத்திருந்த காதல் தொடர்பான சம்பவத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் மாணவன் ஒருவன் காயமுற்று கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Gampola area School Three Students clash)

இந்தச் சம்பவம் கம்பளை பேரூந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கைகலப்பில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் உடல் நிலைமையை பொறுத்தே ஏனைய மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வகுப்புகளுக்கு பின்னர் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்ற பின்னர், வீடு திரும்புவதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்ற குறித்த மாணவர்கள் அங்கிருந்த அதிகளவிலான மக்களுக்கு மத்தியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இந்த கைகலப்புடன் தொடர்புடைய மாணவன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த மாணவி மேல் காதல் கொண்ட வேறொரு பாடசாலை மாணவன் ஒருவன் இதனை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Gampola area School Three Students clash
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites