ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை காப்பாற்ற முடியாத ஜனாதிபதியின் செயல் வேடிக்கையானது

0
1018
Funny President Maithripala Sirisena Active

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். (Funny President Maithripala Sirisena Active)

எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், தனது மனையின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் ஏறியமை உலகத்தின் கவனத்தையீர்த்தது.

இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டிருந்தது. அதேபோன்று பல மனித நேய அமைப்புக்களும் கேட்டிருந்தன.

ஆனாலும், அதனை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி கிளிநொச்சியில் 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையாகயுள்ளது.

உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்யக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

tags:- Funny President Maithripala Sirisena Active
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites