“ரஷீட் கானின் பந்தை எப்படி எதிர்கொண்டேன்” : நிஜத்தை கூறினார் தவான்

0
496
Dhawan vs Rashid cricket news Tamil 2018

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிக்கர் தவான் 107 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இதில் ஆப்கானிஸ்தான் அணியில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட ரஷீட் கானின் பந்து வீச்சை, தவான் இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில் ரஷீட் கானின் பந்து வீச்சை எவ்வாறு இலகுவாக எதிர்கொண்டேன் என்பதை சிக்கர் தவான் விளக்கியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“அவரின் பந்து வீச்சை இலகுவாக என்னால் எதிர்கொள்ள முடிந்தது என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம், சன்ரைசஸ் வலை பயிற்சிகளின் போது, ரஷீட் கானி்ன் பந்து வீச்சையே நான் அதிகமாக எதிர்கொண்டேன்.

அவரது பந்து வீச்சை அதிகமாக எதிர்கொண்ட காரணத்தில்தான் என்னால் சிறப்பாக செயற்பட முடிந்தது. அதுதான் எனக்கு பெரிய உதவியாகவும் இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியினர் இறுதி சீசனில் (நேற்று) போட்டியின் கட்டுப்பாட்டை தங்களுக்குள் கொண்டுவந்தமையை நாம் காணக்கூடியதாக இருந்தது. என்னால் நிச்சயமாக கூறமுடியும் அவர்களால் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் சர்வசே கிரிக்கெட்டில் நீண்ட தூரத்துக்கு பயணிக்கவும் முடியும்.

நான் ரஷீட் கானின் பந்து வீச்சை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அதன் மூலம் அவரது பந்து வீச்சை என்னால் சிறப்பாக கையால முடிந்தது. ஆனால் அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவரால் முக்கியமான தருணங்களில் அணிக்காக விக்கட்டுகளை சரிக்க முடியும்” என பாராட்டினார்.

<<Tamil News Group websites>>

Dhawan vs Rashid cricket news Tamil 2018, Dhawan vs Rashid cricket news Tamil 2018